செய்திகள்

லியோ - அசரடிக்கும் விநியோக உரிமைத் தொகை!

6th Jun 2023 04:37 PM

ADVERTISEMENT

 

வெளியீட்டிற்கு முன்பான லியோ திரைப்படத்தின் வியாபாரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தோடு முடிவடைய உள்ளதாகவும் விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இதையும் படிக்க:  வில்லனாகும் இயக்குநர் சுசீந்திரன்

இந்நிலையில், லியோவின் கேரள மாநில வெளியீட்டு விநியோக உரிமை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, ஒரு தமிழ்ப் படத்திற்கு கேரளத்தில் கிடைத்த மிகப்பெரிய விநியோக உரிமைத் தொகையாகும்.

வெளிநாட்டு உரிமம் ரூ.60 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல். மேலும், லியோ படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT