செய்திகள்

லியோ வெளியான பிறகே விஜய் - 68 அப்டேட்!

6th Jun 2023 12:42 PM

ADVERTISEMENT

 

விஜய் - 68 படத்தின் அப்டேட் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்குப் பிறகு, விஜய்யை இயக்குவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

பின், விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: வெளியானது ரெஜினா டிரைலர்

இப்படத்திற்கு ‘சிஎஸ்கே’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ரெஜினா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ’தளபதி - 68 அப்டேட்’ என ரசிகர்கள் கூச்சலிட்டனர். 

இதனைக் கேட்ட வெங்கட் பிரபு, ‘லியோ படம் வெளியான பிறகே தளபதி - 68 அப்டேட் கொடுக்கப்படும். இப்போது, சொன்னால் விஜய் சார் என்னைத் திட்டுவார்’ என நகைச்சுவையாகக் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT