செய்திகள்

எல்ஜிஎம் படத்தின் டீசரை வெளியிடும் தோனி: எப்போது தெரியுமா? 

6th Jun 2023 08:08 PM

ADVERTISEMENT

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பில் உருவான தமிழ்ப் படத்தின் டீசர் குறித்த் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். ரோர் ஆஃப் தி லயன் என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் வுமன்ஸ் டே அவுட் என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள். 

சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்‌ஷியும். 

ADVERTISEMENT

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் படத்தின் டீசரை தோனி நாளை மாலை 7 மணிக்கு வெளியிட உள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT