செய்திகள்

விடாமுயற்சியில் அஜித்துக்கு ஜோடி யார்?

5th Jun 2023 12:16 PM

ADVERTISEMENT

 

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் அஜித்தின் நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு  அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன்படி, அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | விடாமுயற்சி படப்பிடிப்பு தேதி குறித்து தகவல்!

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பானது இந்த வாரம் புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு 5-வது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார் நடிகை த்ரிஷா.

மேலும், படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT