செய்திகள்

ஹாலிவுட் நடிகை போலிருக்கிறீர்கள்: மிர்ணாளினியை புகழும் ரசிகர்! 

4th Jun 2023 04:47 PM

ADVERTISEMENT

 

டப்ஸ்மாஷ், டிக்டோக், ரீல்ஸ்களில் பிரபலமானவர் மிர்ணாளினி. பின்னர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடனம் வைரலானது. பின்னர் விஷாலின் எனிமி படத்திலும் அவர் ஆடிய நடனம் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

எம்ஜிஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாம்பியன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.

ADVERTISEMENT

தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் மிர்ணாளினி. இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள மிர்ணாளினி ரவி  புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். புதிய புகைப்படமொன்றுக்கு ரசிகர் ஒருவர் மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் நாயகி  மிச்செல் ரோட்ரிக்வெஸ் போலவே இருக்கிறார்கள் என கமெண்ட் செய்துள்ளார். 

இந்த புதிய புகைப்படங்களுக்கு பலரும் இதய எமோஜிக்களை கமெண்ட்டுகளில் பறக்கவிட்டு வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT