செய்திகள்

எஸ்.ஜே.சூர்யா படத்தின் டிரைலரை வெளியிட்ட விஜய் பட இயக்குநர்!

4th Jun 2023 01:24 PM

ADVERTISEMENT

 

தனித்துவமான இயக்குநராக இருந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். மாநாடு படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வதந்தி இணையத் தொடர் நல்ல வரவேற்பினை பெற்றது. 

எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை'. கதாநாயகியாக  பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 

இதையும் படிக்க: இன்ஸ்டாகிராமில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா! 

ADVERTISEMENT

இப்படத்தை மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன்  இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகியது.

இதையும் படிக்க:  சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்? 

பொம்மை திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 16 ஆம் தேதி பொம்மை படம் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விஜய்யின் 68வது படத்தினை இயக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு பொம்மை படத்தின் 2வது டிரைலரை வெளியிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT