செய்திகள்

பிரசாந்த் நீல் பிறந்தநாள்: விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு! 

4th Jun 2023 11:43 AM

ADVERTISEMENT

 

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர்  பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சலார் 2023 - செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.  

ADVERTISEMENT

இந்நிலையில் படக்குழு விடியோவை வெளியிட்டு இயக்குநர் பிரசாந்த் நீல்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் பிரபாஸும், “டார்லிங் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து” என தெரிவித்துள்ளார். மேலும் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT