தனித்துவமான இயக்குநராக இருந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். மாநாடு படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வதந்தி இணையத் தொடர் நல்ல வரவேற்பினை பெற்றது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாரிசு படத்தில் சிறிய கதாபாத்திரம் செய்திருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 படத்திலும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரசாந்த் நீல் பிறந்தநாள்: விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு!
ட்விட்டரில் 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.ரசிகர்களை பாராட்டி உடனுக்குடன் ரிப்ளை செய்து வருபவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் ரீஸ்ஸ், புகைப்படங்களுக்கென ப்ரத்யேகமான அப்ளிகேஷனாகும்.