செய்திகள்

விஜய் பட இயக்குநர் வெளியிடும் ரெஜினா படத்தின் டிரைலர், இசை! 

3rd Jun 2023 04:52 PM

ADVERTISEMENT

 


காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

இதையும் படிக்க:  நீங்க ஏன் ஹீரோயினா நடிக்கக் கூடாது?: அஞ்சனாவின் அழகிய புகைப்படத்தினால் மயங்கிய ரசிகர்! 

ADVERTISEMENT

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிக்க: 2018 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? 

நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ள படம்தான் ரெஜினா. இதில் நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சதிஷ் நாயர் தயாரித்துள்ள இந்தப் படத்தினை இயக்குகிறார் டோமின் டி செல்வா. யுகபராதி எழுதிய பாடல் எழுதியுள்ளார். தயாரிப்பாளரான சதிஷ் நாயர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இதன் டீசர் நல்ல வரவேற்பினை பெற்றது. 

 இந்நிலையில் விஜய்யின் 68வது படத்தினை இயக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு ஜூன் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிட உள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT