செய்திகள்

வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன்: இயக்குநர் மாரி செல்வராஜ்

DIN

வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வரவிக்கும் படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. 

விழாவில் கமல்ஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், தேவர் மகன் பார்க்கும் போது எனக்கு வலி, வேதனைகள் ஏற்பட்டது. ஒரு சினிமா எப்படி புரட்டி போடுகிறது? எது சரி தவறு என தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த நாள். 

என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் மாமன்னன். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் எடுக்கும்போது, தேவர் மகன் பார்த்துவிட்டு தான் எடுத்தேன். அதில் வரும் வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன். இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT