செய்திகள்

குக் வித் கோமாளியின் முதல் இறுதிப் போட்டியாளர் யார்?

1st Jun 2023 04:52 PM

ADVERTISEMENT

குக் வித் கோமாளி போட்டியில் தேர்வான முதல் இறுதிப் போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ் வெளியேறியுள்ள நிலையில், தற்போது சிவாங்கி, விசித்ரா, ஆன்ட்ரியன், மைம் கோபி, சுருஸ்டி, கிரண் ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.

இதையும் படிக்க: பிரபாஸூக்கு வில்லனாகும் கமல்? அதிர்ச்சி தரும் சம்பளம்!

இந்த நிலையில், இந்த வாரம் முதல் இறுதிப் போட்டியாளரை நேரடியாக தேர்வு செய்யும் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

நான்காவது ப்ரோமோவில், இறுதிப் போட்டியாளராக சிவாங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவாங்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT