செய்திகள்

தங்கலான் படத்தின் புதிய அப்டேட்!

1st Jun 2023 09:25 PM

ADVERTISEMENT

தங்கலான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT

இதற்கிடையே, படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால், சிறிது காலம் ஓய்வில் உள்ளளார்.

இதையும் படிக்க: மும்பையில் தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!

இந்நிலையில்,  மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தங்கலான் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 15 ஆம் தேதி மீண்டும் தொடங்கி, 12 நாள்கள் நடைபெறுகிறது. நடிகர் விக்ரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT