செய்திகள்

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

1st Jun 2023 06:48 PM

ADVERTISEMENT

ஜெயிலர் படத்தின் படப்படிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இப்படம் ஆகஸ்ட்  10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: புதுவையில் லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினி!

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT