செய்திகள்

புதுவையில் லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினி!

1st Jun 2023 05:51 PM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று வரும்  லால் சலாம் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கலந்து கொண்டார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல்கட்டப் படிப்பிடிப்பு ஏற்கெனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்துள்ளது. இன்று புதுச்சேரி ரோடியர் மில் பழைய வளாகத்தில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதற்காக நேற்று மாலை தனது மகளுடன் புதுச்சேரி வந்தடைந்தார் ரஜினிகாந்த். இன்று ரோடியர் மில்லில் நடைபெறும் படப்பிடிப்புக்கு ரஜினி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ரஜினியின் சண்டைக் காட்சிகள் இங்கு படமாக்கப்படுகிறது.

இதற்கிடையே, ரஜினியை காண ரசிகர்கள் திரண்டதால், மில்லின் நுழைவுவாயில் பூட்டப்பட்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT