செய்திகள்

விஷால் 34: கதாநாயகியை அறிவித்த படக்குழு!

17th Jul 2023 02:14 PM

ADVERTISEMENT

நடிகர் விஷாலின் 34வது படத்தின் கதாநாயகியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2007இல் இந்த கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. பின்னர் 2014இல் வெளியான பூஜை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘விஷால் 34’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் படத்திற்கு பூஜை போடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15 ஆம் தேதி துவங்கப்பட்டது.

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

இந்த நிலையில், விஷாலின் 34வது படத்தில் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT