செய்திகள்

ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

17th Jul 2023 01:52 PM

ADVERTISEMENT

ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார் வில்லனாகவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

ஏற்கெனவே, இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் வரும் இன்று(ஜூலை 17) மாலை வெளியாக உள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: வருகிறது புதிய தொடர்: விரைவில் நிறைவடையவிருக்கும் பிரபல சீரியல்!

இதையொட்டி, ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT