செய்திகள்

விஜய் சேதுபதி 50: படத்தின் பெயர் அறிவிப்பு!

12th Jul 2023 06:45 PM

ADVERTISEMENT

விஜய் சேதுபதியின் 50வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் சேதுபதி  நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ‘விஜேஎஸ்51’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  விஜய் சேதுபதியின் 50வது படத்தின் பெயரை மகாராஜா என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT