செய்திகள்

பிரேம்ஜியின் சத்திய சோதனை படத்தின் டிரைலர் வெளியீடு!

12th Jul 2023 04:27 PM

ADVERTISEMENT

பிரேம்ஜியின் சத்திய சோதனை படத்தின் டிரைலரை வெளியானது.

பிரேம்ஜி நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சத்தியசோதனை. சுரேஷ் சங்கையா ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு சத்தியசோதனை படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிரேம்ஜியுடன் பிக்பாஸ் ரேஷ்மா, ஸ்வயம் சித்தா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவைக் கலந்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

இப்படத்தை சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார். ஆர்.பி. சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ரகுராம் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில், சத்தியசோதனை படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: விரைவில் துருவ நட்சத்திரம் டிரைலர்

இப்படத்தின் டிரைலர் நேற்று(ஜூலை 11) வெளியான நிலையில், ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT