செய்திகள்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி?

12th Jul 2023 12:35 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் நானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும் சிபிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. 

காரணம், லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினியை வைத்து சிபி இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கதை சரியாக இல்லாததால் ரஜினி விலகிக்கொண்டார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: வேட்டையாடு விளையாடு - 2 பணிகளில் கௌதம் மேனன்

பின், சிபி சக்கரவர்த்தி  தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களில் தன் கதையை சொல்லி வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் நானியை வைத்து சிபி படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT