செய்திகள்

கிழக்கு வாசல் தொடரில் எஸ்.ஏ. சந்திரசேகர் கேரக்டரில் நடிக்க வேண்டியது இவர் தான்!

12th Jul 2023 06:10 PM

ADVERTISEMENT

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் அதிக அளவிலான ரசிகளைக் கவர்ந்துள்ளது. 

எதிர்நீச்சல் தொடரில் பல கதாபாத்திரங்கள் மக்கள் மனங்களை வென்றுள்ளன. குறிப்பாக நடிகர் மாரிமுத்துவின் குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும், அவர் கூறும் ‘இந்தாம்மா ஏய்’ என்ற வசனம் பெரும் ரெண்டாகி வருகிறது.

சமீபத்தில், எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் மாரிமுத்து தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "கிழக்கு வாசல் தொடரில் நடிக்க ராதிகா மேடம் எனக்கு கால் பண்ணி கேட்டாங்க. ஆனா, என்னால நடிக்க முடியாத சூழல் இருந்துச்சு. அதனால அந்த கேரக்டர்ல எஸ்.ஏ. சந்திர சேகர் நடிக்கிறார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: மார்க் ஆண்டனி - விஷால் கொடுத்த அப்டேட்!

ADVERTISEMENT

ஒருவேளை கிழக்கு வாசல் தொடரில் எஸ்.ஏ. சந்திரசேகர் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தால் பாசமான தந்தையாக பார்த்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் உள்ளிட்ட படங்களில் மாரிமுத்து நடித்துள்ளார். ரஜின்காந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT