செய்திகள்

விரைவில் துருவ நட்சத்திரம் டிரைலர்

12th Jul 2023 03:37 PM

ADVERTISEMENT

 

விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது.

கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையும் படிக்க | ‘தங்கலான்’ படத்தின் மேக்கிங் விடியோ!

ADVERTISEMENT

இருப்பினும், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போன நிலையில், சமீபத்தில் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜும் இப்படத்தின் இசைக்கான பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ’துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT