செய்திகள்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோ எப்போது வெளியாகும்?

31st Jan 2023 12:21 PM

ADVERTISEMENT

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் ஜூன்  9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து  திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆனால், இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால்  அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவை பியாண்ட் தி ஃபேரி டேல்(beyond the fairy tale) என்கிற பெயரில் நெட்ஃபிளிக்ஸ் விரைவில் வெளியிட உள்ளது. அந்த விடியோவின் டீசரானது ஏற்கனவே வெளியாகியது.

இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் 2 குறித்து புதிய அப்டேட்!

இந்த நிலையில் விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகார்வபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT