செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67: அதிகாரபூர்வ அறிவிப்பு

30th Jan 2023 06:19 PM

ADVERTISEMENT

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக  இன்று வெளியானது.

வாரிசு படத்துக்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்தக் கூட்டணியில் இதற்கு முன்பு மாஸ்டர் படம் வெளியானது.

இந்நிலையில்  தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதுபற்றி செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

படம் தற்போது தளபதி 67 என அழைக்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். படப்பிடிப்பு ஜனவரி 2, 2023 அன்று தொடங்கியது. கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களுக்கு அடுத்ததாக விஜய்யுடன் இணைந்து 4-வது முறையாகப் பணிபுரிகிறார் அனிருத். இதர விவரங்கள்:

ஒளிப்பதிவு - மனோஜ் பரஹம்சா
ஆக்‌ஷன் - அன்பறிவ்
படத்தொகுப்பு - பிலோமின் ராஜ்
கலை - சதீஷ் குமார்
நடனம் - தினேஷ்
வசனம் - லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி

தளபதி 67 படத்தின் இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT