செய்திகள்

இந்த வாரம் வெளியாக காத்திருக்கும் படங்களின் பட்டியல்!

30th Jan 2023 05:07 PM

ADVERTISEMENT

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் பொங்கலுக்கு வெளியான நிலையில்,  வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி ஏழு  திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

பொம்மை நாயகி

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகிவரும் பொம்மை நாயகி  திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு நடித்துள்ளார்.  இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக ஆக உள்ளது.

மைக்கேல்

ADVERTISEMENT

மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

ரன் பேபி ரன்

ரன் பேபி ரன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.  த்ரில்லர் ஜானரில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

தலைக்கூத்தல்

சமுத்திரகனி, கதிர், வசுந்தரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைக்கூத்தல்’. இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.  இப்படமும் பிப்ரவரி 3-ந் தேதி வெளியாக வெளியாக உள்ளது.

தி கிரேட் இண்டியன் கிச்சன்

2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.  இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இயக்குநர்  ஆர். கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ராகுல், ரவீந்திரன் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குற்றப்பின்னணி

ராட்சசன் படத்தில் வில்லனாக நடித்த சரவணன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம்  'குற்றப்பின்னணி'. இப்படத்தை இஸ்மாயில் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக ஆக உள்ளது.

நான் கடவுள் இல்லை

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள திரைப்படம் 'நான் கடவுள் இல்லை'. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: சந்திரமுகி 2: கங்கனா புதிய தகவல்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT