செய்திகள்

இணையத்தில் வைரலாகும் ஏ.ஆர். ரஹ்மான் மகனின் பாடல்!

DIN

ஏ.ஆர். ரஹ்மான் மகனான ஏ.ஆர்.ஆர். அமீனின் இசையில் உருவான 'அடியே சோனாலி' என்ற ஒரு நிமிட பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

கடந்த திங்கள் கிழமை வெளியான இப்பாடல், நான்கு நாள்களில் 2 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 

இசைக் கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களை ரீல்ஸில் பாடல்களை உருவாக்கி வெளியிடவும், அதன்மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வழிவகை செய்யும் வகையில், மெட்டா  நிறுவனம் கடந்த ஆண்டு  ஒரு நிமிடப் பாடல் (#1 மினிட் மியூசிக்) என்ற புதிய மியூசிக் வசதியை அறிமுகப்படுத்தியது.

இந்த வசதியைப் பயன்படுத்தி யுவன் ஷங்கர் ராஜா, பென்னி தயாள் ஆகியோர் தங்கள் மெட்டமைத்த இசையை வெளியிட்டுள்ளனர். அந்த வரிசையில் ஏ.ஆர். ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.ஆர். அமீன் இசையமைத்த ஒரு நிமிடப் பாடல் கடந்த திங்கள் கிழமை வெளியாகியுள்ளது. 

வெளியான நான்கு நாள்களில் இந்த பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 'அடியே சோனாலி' எனத் தொடங்கும் இந்த பாடலை ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் குட்டி ரேவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 

'அடியே சோனாலி' பாடல் குறித்து பேசிய அமீன், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் தற்போது புதிய இசை கண்டெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இசை அறியப்படுகிறது. ஆனால், சிறிய விடியோக்கள் மூலம் உருவாகும் இசை விடியோக்கள் மக்களிடம் இன்னும் அதிகமாக சென்றடையும். ஒரு நிமிடப் பாடல் மூலம் மெட்டாவுடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அடியே சோனாலி பாடலை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் அதிக அளவிலான மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT