செய்திகள்

‘இலட்சிய படக்குழு; லவ் யூ தளபதி’- வாரிசு பாடலாசிரியர் விவேக் ட்வீட்!

22nd Jan 2023 12:06 PM

ADVERTISEMENT

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது. தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றதைத் தொடர்ந்து  தெலுங்கில் வாரசுடு வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் ஜன.14 வெளியாகியது.

இதையும் படிக்க: ஸ்ருதி ஹாசன் நடித்த இரண்டு படங்களும் ரூ.100 கோடி வசூல்!

ADVERTISEMENT

தமிழைப் போலவே தெலுங்கிலும் வாரசுடு திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் அதன் கொண்டாட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் உலகம் முழுவதும் 7 நாளில் ரூ. 210 கோடி வசூலானதாக அறிவித்தது. 

இதையும் படிக்க: நிறமிழக்கும் அறிய வகை நோயினால் பாதித்த நடிகை!

இந்நிலையில், வாரிசு படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. முன்னதாக நன்றி தெரிவிக்கும் விழாவை சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT