செய்திகள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்? 

21st Jan 2023 01:47 PM

ADVERTISEMENT

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் அடுத்து விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பி. மதுவின் லைட் ஹவுஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக உள்ளதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ஸ்ருதி ஹாசன் நடித்த 2 படங்களும் ரூ.100 கோடி வசூல்!

முருகதாஸின் கடைசிப் படமான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் எழுந்தது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் முடிந்ததும் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாகவும், பான் இந்தியப் படமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ‘காந்தாரா 2’ உறுதி: படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT