செய்திகள்

ஜேம்ஸ் கேமரூன் - ராஜமௌலி பேசியது என்ன? விடியோ வெளியானது! 

21st Jan 2023 05:06 PM

ADVERTISEMENT

பாகுபலி2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கினார். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் தயாரித்தது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்தார்கள். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்தார்கள். 

உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தது. ஆர்ஆர்ஆர் 2-ம் பாகத்தின் கதையைத் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் உறுதி செய்தார் இயக்குநர் ராஜமெளலி. 

இதையும் படிக்க: சூர்யாவை அடுத்து விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல மலையாள இயக்குநர்?

தி டெர்மினேட்டர், ட்ரூ லைஸ், டைட்டானில், அவதார், அவதார் 2 போன்ற உலகளவில் வசூலைக் குவித்த படங்களை இயக்கியவர் ஜேம்ஸ் கேம்ரூன். கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படமான ஆர்ஆர்ஆர்-ஐ ஜேம்ஸ் கேமரூன்  பாராட்டி பேசியிருந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலி பேசியது பேசிய விடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: ‘8 வருஷமாக அஜித்தை சந்திக்க முயன்று சோர்வடைந்து விட்டேன்’- இயக்குநர் அல்போன்ஸ் வேதனை!

“டெர்மினேட்டர் முதல் டைட்டானிக் வரை உங்களது எல்லாப் படங்கள் மிகவும் பிடிக்கும்” என ராஜமௌலி கூறினார்.

“உங்களது படங்களின் கதாபாத்திரங்களை பார்க்கும்போது உணர்ச்சி மிகுந்ததாக உள்ளது. நெருப்பு, நீர் என நீங்கள் படத்தினை சரியாக செட் அப் செய்துள்ளீர்கள். ஹீரோ என்ன செய்கிறார், ஏன் செய்கிறார் என கொஞ்சம் கொஞ்சமாக ரிவீல் செய்கிறீர்கள். ட்விஸ்ட் மற்றும் நண்பர்களுக்குள்ளானது என அனைத்துமே நன்றாக இருந்தது” என கேம்ரூன் கூறினார். இதற்கு ராஜமௌலி விருதை விடவும் இந்த வார்த்தைகள் மிகவும் பெரியது எனக் கூறினார். 

படம் பிடித்துப் போகவே 2 முறை பார்த்துள்ளார். படம் எடுக்க எவ்வளவு நாள் ஆனது என கேம்ரூன் கேட்க 320 நாட்கள் ஆனதாக ராஜமௌலி தெரிவித்தார். “நீங்கள் உலகத்திலே டாப்” என கேம்ரூன் கூறினார்.  

பின்னர் இறுதியாக, “இங்கே (ஹாலிவுட்டில்) படம் எடுக்க வேண்டுமானால் சொல்லுங்கள் பேசலாம்” என கேமரூன் கூறியுள்ளார். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT