சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு 2012இல் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானார். 2022இல் அவரது டாணாக்காரன் படம் நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்திலும், ‘ரெய்டு’ படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: ‘துணிவு பொங்கலா? வாரிசு பொங்கலா?’ - ரெட் ஜெயண்ட் அதிரடி ட்வீட்!
இந்நிலையில் புதியப் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. எலி, தெனாலிராமன் ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் ‘இறுகப்பற்று’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் விதார்த், சானியா ஐயப்பன், மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் 3 ஜோடிகளுக்கு உள்ளாக நடைபெறும் டிராமாதான் கதைக்களமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ஸ்ருதி ஹாசன் நடித்த 2 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!
திரைக்கு வரும் முன்பே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.