செய்திகள்

அமெரிக்காவில் மேலும் இரு விருதுகளை வென்ற ஆர்ஆர்ஆர் படம்!

DIN


திரைப்படங்களில் வெளிப்படும் சிறந்த திறமைகளைக் கொண்டாடும் விதமாக விமர்சகர்கள் சங்கத்தின் பங்களிப்பில் வருடந்தோறும் தி கிரிடிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 28-வது கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் தெலுங்குப் படமான ஆர்ஆர்ஆர் இரு முக்கிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கினார். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்தது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்தார்கள். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்தார்கள். ஆர்ஆர்ஆர் படம் 2022 மார்ச் 25 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியானது. உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தது. ஆர்ஆர்ஆர் 2-ம் பாகத்தின் கதையைத் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் உறுதி செய்தார் இயக்குநர் ராஜமெளலி. 

இந்நிலையில் 28-வது கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த பாடல் என இரு முக்கிய விருதுகளை ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் வென்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் சிறந்த அசல் பாடலுக்கான விருதை ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து பாடல் வென்றது. இதையடுத்து தற்போது மேலும் இரு சர்வதேச விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் வென்று அசத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT