செய்திகள்

அஜித் - விக்னேஷ் சிவன் படம்: ஓடிடி வெளியீடு அறிவிப்பு!

16th Jan 2023 01:20 PM

ADVERTISEMENT

 


அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகும் படம், திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இசை - அனிருத்.

இந்நிலையில் அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகும் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ஏகே 62 என்று அழைக்கப்படும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை நிகழ்வு நடைபெறும் முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT