செய்திகள்

'இனியா' தொடரின் நாயகிக்கு அறுவை சிகிச்சை!

12th Jan 2023 04:51 PM

ADVERTISEMENT

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் கதாநாயகியாக நடித்துவரும் ஆல்யா மானசா விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். காலில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆல்யா பகிர்ந்துள்ளார். விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

படிக்ககணவனின் காதல் கடினமான நேரத்தில்தான் புரிகிறது: 'இனியா' நாயகி ஆல்யா

ADVERTISEMENT

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'இனியா' தொடரில், ஆல்யா மானசா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடருக்குப் பிறகு ஆல்யா மானசா நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் இரண்டாவது குழந்தையை பிறந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'இனியா' தொடரில் நடித்து வருகிறார்.

இதனிடையே விபத்தில் சிக்கியதால் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் பெரிய கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த விபத்து எதிர்பாராத ஒன்று எனவும், விரைந்து குணமடைய நண்பர்களும் ரசிகர்களும் வேண்டிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT