செய்திகள்

‘கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க’: பிக் பாஸிடம் கெஞ்சிய அஷீம்!

12th Jan 2023 01:45 PM

ADVERTISEMENT

பிக் பாஸில் எப்போதும் கெத்தாக சுத்திக் கொண்டிருந்த அஷீம் நேற்று பிக் பாஸிடம் கெஞ்சிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஷீம், விக்ரமன், சிவின், அமுதவாணம், ஏடிகே, மைனா, கதிரவன் ஆகிய 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது உள்ளனர்.

இறுதி வாரமான அடுத்த வாரத்திற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே செல்லவுள்ள நிலையில், இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள். இதற்கிடையே பணப்பெட்டி அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் அதை எடுத்துக் கொண்டும் ஒருவர் போட்டியை விட்டு விலகலாம்.

இந்நிலையில், இந்த வாரம் தியாகம்(சேக்ரிஃபைஸ்) டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, துண்டுச் சீட்டில் பெயருடன் டாஸ்க் வழங்கப்பட்டிருக்கும், அதை போட்டியாளர்கள் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ’துணிவு - வாரிசு’ முதல்நாள் வசூலில் இவர்தான் நம்.1!

இந்த டாஸ்க்கில் மைனாவுக்கு தலை முடியை வெட்டுவது, விக்ரமனுக்கு கை, கால் முடிகளை சுத்தமாக எடுப்பது, ஏடிகே அவரது ஆடைகளை அனுப்பிவிட்டு பிறரின் ஆடைகளை அணிவது போன்றவை வழங்கப்பட்டது.

அஷீமுக்கு பிக் பாஸ் அளித்த உள்பனியன் மற்றும் லுங்கி மட்டும்தான் அணிய வேண்டும், கண்ணாடியை பார்த்து அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அஷீமும் கடந்த இரண்டு நாள்களாக லுங்கி, பனியனுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் உலா வந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த சீசனில் வெளியேற்றப்பட்ட ஜி.பி.முத்து, சாந்தி, அசல், ராபர்ட் மாஸ்டர் என ஒவ்வொரு போட்டியாளராக வீட்டிற்குள் வந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து ஸ்டோர் ரூம் சென்ற அஷீம், ’தயவுசெய்து பெரிய மனசு பண்ணி எனக்கு வேற ஆடை கொடுங்க, எல்லாரும் உள்ள வரப்ப இந்த ஆடை எனக்கு ரொம்ப சங்கடமாக உள்ளது’ எனக் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதும் கெத்தாக சுத்தும் அஷீமுக்கா இந்த நிலைமை என பிக் பாஸ் ரசிகர்கள் இணையத்தில் பரிதாபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT