செய்திகள்

நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’: க்ளிம்ஸ் விடியோ வெளியானது! 

1st Jan 2023 02:01 PM

ADVERTISEMENT

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் கஸ்டடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார். 

இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர், அர்விந்தசாமி ஆகியோர் நடிக்கின்றனர். 

2023ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் க்ளிம்ஸ் விடியோவை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழு. 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT