செய்திகள்

நந்தா பெரியசாமி படத்தில் பிரபல யூடியூபர்! 

1st Jan 2023 01:24 PM

ADVERTISEMENT

பிரபல யூடியூபர் மதன் கௌரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நந்தா பெரியசாமி. மாத்தி யோசி, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இதையும் படிக்க: வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த செல்வராகவன்!

மதன் கௌரி மிகவும் பிரபலமான யூடியூபர். தினமும் ஒரு விடியோ பதிவிட்டு மக்களிடையே புகழ்பெற்ற இவருக்கு ரசிகர்கள் ஏராளம். 66 லட்சம் பேர் அவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள். 

ADVERTISEMENT

இந்நிலையில், முதன்முறையாக மதன் கௌரி நாயகனாக படத்தில் நடித்துள்ளார். நந்தா பெரியசாமி இயக்கும் ‘தேடி தேடி பாத்தேன்’ எனும் படத்தில் நடித்துள்ளார்.  ஸ்ரீரிதா ராவ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

வி. மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசை- தாரன் குமார். ஒளிப்பதிவு- கே.ஏ. சக்திவேல். படத்தொகுப்பு - ஆண்டனி. பாடல்களை கு. கார்த்திக் எழுதியுள்ளார். 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் இசை வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT