செய்திகள்

'இசை நிகழ்ச்சியிலிருந்து ஓடிப்போனது ஏன்?’- பிரபல மலையாள நடிகர் விளக்கம்! 

DIN

38 வயதான வினீத் ஸ்ரீனிவாசன் பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் நடிகர் என பலதுறைகளில் மலையாள சினிமாவில் பங்காற்றி வருபவர். அவருடைய ஹிருதயம் படம் தமிழ், மலையாளத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. பிரேமம் படத்திலும் அவர் பாடிய பாடல் மிகவும் பிரபலம்.

சமீபத்தில் வெளியான அவரது 'உன்னி முகுந்தன்’ நகைச்சுவையில் சிறப்பாக இருந்ததாகவும் ‘தங்கம்’ படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்று வருகிறது. 

இந்நிலையில் அவர் கேரளாவில் வாரநாடு கோயில் விழாவில் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக வந்திருந்தார். பின்னர் பாடிக்கொண்டு இருக்கும்போதே பாதியில் ஓடிப்போனதாக சமூகவலைதளங்களில் புகார் எழுந்தது.

இது குறித்து வினீத் ஸ்ரீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது: 

வாரநாடு கோயில் நிகழ்ழ்சி தொடர்பாக எனக்கு அதிகம் செய்திகள், விடியோக்கள் வந்துள்ளதால் இதைப் பற்றி எழுதுகிறேன். சமீபத்தில் நான் மிகவும் விரும்பிய நிகழ்ச்சிகளுல் அதுவும் ஒன்று. நிகழ்ழ்சியின் இறுதியில் நான் விழாவை நிறுத்த முயன்றேன். கட்டுக்கடங்கதா கூட்டத்தால் நான் அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பினேன். 

கோயிலின் உள்ளே காரை கொண்டு வர முடியாது என்பதால் நான் ஓடிப்போய் காரில் ஏற வேண்டியிருந்தது. ஆனால் என் மீது எந்த வன்முறையும்  நிகழவில்லை. பாடகராக இது என்னுடைய 20ஆவது வருட நிகழ்ச்சி. இங்கு 2வது முறையாக பாடியுள்ளேன். இன்னொருமுறை அழைத்தால் மீண்டும் கலந்துக்கொள்ளவும் தயாராக உள்ளேன். 

இந்த நிகழ்ச்சி முழுவதும் ரசிகர்கள் என்னுடன் சேர்ந்து பாடினார்கள். இது ஒரு நிறைவான அனுபவம். ஒரு கலைஞனுக்கு இதை விடவும் வேறென்ன வேண்டும்? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT