செய்திகள்

சின்னத்திரையில் நகைச்சுவைத் தொடர் வராதா?

DIN

பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் புதிய புதிய தொடர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவை விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. 

மலர், மிஸ்டர் மனைவி, விக்ரம் வேதா, பொன்னி, சீதா ராமன் ஆகிய தொடர்களின் முன்னோட்ட விடியோக்கள் சமீபத்தில் வெளியாகின. 

இவை அனைத்தும் பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்து அம்மா - மகள் பாசம், அப்பா - மகள் பாசம், இருவேறு துருவங்களில் பயணிப்பவர்களின் காதல், திருமண சிக்கல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளன. 

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா -2, மகாநதி போன்றவையும் உறவுச் சிக்கலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளன. 

சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் அறிமுகமாகி ஓடிக்கொண்டிருக்கும் இனியா போன்ற தொடரும் இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. 

சின்னத் திரை தொடர்களின் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முன்னணி இடங்களில் இருக்கும் கயல், சுந்தரி, வானத்தைப்போல, எதிர்நீச்சல், கண்ணான கண்ணே போன்ற தொடர்களும் மிகவும் சீரியசான கதையம்சம் கொண்டதாகவே இருக்கின்றன. 

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனங்களைக் கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா -2, போன்ற தொடர்களும் திருமண உறவு அல்லது திருமணத்துக்குப் பிறகு சந்திக்கும் பிரச்னைகள் போன்றவற்றையே காட்டுகின்றன. 

மாரி, நினைத்தாலே இனிக்கும், மீனாட்சி பொண்ணுங்க, கார்த்திகை தீபம், வித்தியா நம்பர் 1 போன்ற ஜீ தமிழ் தொடர்களும் குடும்பத் தலைவிகளை குறிவைத்து அழுகாட்சியாக எழுது வடிக்கின்றனர். 

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் மலர், மிஸ்டர் மனைவி ஆகிய தொடர் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் விக்ரம் வேதா, பொன்னி தொடர்களும் ஜீ தமிழில் சீதா ராமன் தொடரும் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளன. 

இந்தத் தொடர்களின் புரோமோவும் உறவுச் சிக்கல், திருமண பந்தம், மாமியார் கொடுமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என அவற்றின் முன்னோட்டக் காட்சி (புரோமோ) கண்டாலேத் தெரிகிறது. 

சமீபத்தில் வெளியான பொன்னி தொடருக்கான முன்னோட்ட விடியோவில், அழுகாட்சி தொடர்கள் வேண்டாமே என ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

இப்படி சீரியல் என்றாலே சீரியஸாகத்தான் இருக்க வேண்டும் என்ற மனநிலை உருவாகியுள்ளது என்றே தோன்றுகிறது. ஆறுதல் என்னவெனில், எதிர்நீச்சல், புதுப்புது அர்த்தங்கள் போன்ற சில தொடர்கள் முற்போக்கு சிந்தனையை விதைப்பவையாக உள்ளன என்பதுதான்.

சற்று காலத்துக்கு முன்பு இதே சின்னத் திரையில், சின்ன பாப்பா பெரிய பாப்பா, மாமா மாப்ளே, மைடியர் பூதம், மடிப்பாக்கம் மகாதேவன் போன்ற தொடர்கள் நகைச்சுவையை மட்டுமே அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டன. 

இந்த நகைச்சுவைத் தொடர்கள் இப்போதும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதுபோன்று இப்போதைய சூழலில் நகைச்சுவைத் தொடர் எடுக்கப்பட வேண்டும் என்பதே சின்னத் திரை ரசிகர்கள் விருப்பமாகவும் உள்ளது.

இயந்திரத்தனமாகிவிட்ட அழுத்தம் மிகுந்த தற்கால சூழலில், நகைச்சுவைத் தொடர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியின் ரகசியமும் அதுவே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT