செய்திகள்

சன் டிவியின் பிரபல சீரியல் நிறைவடைகிறது?

21st Feb 2023 12:55 PM

ADVERTISEMENT

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணான கண்ணே சீரியல்  நவம்பர் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் மற்றும் ராகுல் ரவி மற்றும் பப்லு ப்ரிதிவிராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் தொடர் தெலுங்கு தொலைக்காட்சி தொடரான பௌர்ணமியின் ரீமேக் ஆகும்.

இதையும் படிக்க'செம்பருத்தி' நாயகியின் புதிய சீரியல் 'மிஸ்டர் மனைவி'

கண்ணான கண்ணே என்ற முகப்பு பாடலுக்கு 'ஜி கே வி' என்பவர் வரிகள் எழுத பிரபல பாடகி சித்ரா என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு 'சாம்' என்பவர் இசை அமைத்துள்ளார்.

ADVERTISEMENT

தந்தை - மகள் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சில நாள்களுக்கு முன்னர், 700வது எபிசோடை எட்டியதாக சீரியல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க'அபியும் நானும்' - சீசன் 2 வேண்டும்: ரசிகர்கள் ஆர்வம்!

இந்த நிலையில் கண்ணான கண்ணே சீரியல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரோஜா தொடர் நிறைவடைந்த நிலையில், கண்ணான கண்ணே தொடர்  நிறைவடைவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT