செய்திகள்

தொகுப்பாளராக களமிறங்கும் 'குக் வித் கோமாளி' பாலா, நிஷா!

9th Feb 2023 04:50 PM

ADVERTISEMENT

 

விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவைக் கலைஞராக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாலா மற்றும் நிஷா ஆகியோர் தொகுப்பாளராக களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் ஆகிய நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. 

வாரம்தோறும் ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகளின் மூலம், மக்களிடம் பல நகைச்சுவை கலைஞர்கள் நீங்கா இடம்பிடித்தனர். பலர் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித் திரை நட்சத்திரங்களாகவும் உயர்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

படிக்கபுதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி!

சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ராமர், பரட்டை புகழ், பாலா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு வெள்ளித் திரையில் பல படங்களில் நடித்து வருகின்றனர். 

தற்போது கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் (கேபிஒய் சாம்பியன்ஸ்) நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கவுள்ளது. இதனை அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன் தனது இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி, மதுரை முத்து, ரேஷ்மா பசுபுலேட்டி, ஸ்ருத்திகா அர்ஜுன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர். 

படிக்கடிஆர்பி பட்டியலில் பின்னுக்குச் செல்லும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்!

கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியியை பாலாவும், நிஷாவும் தொகுத்து வழங்கவுள்ளதாக தெரிகிறது. 

இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் முன்பு போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படிக்க'சுந்தரி' சீரியலை தடை செய்யனுமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT