சின்னத் திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் 2 இடங்கள் பின் தங்கியுள்ளது.
பல்வேறு இல்லங்களின் தொலைக்காட்சி நேரங்களை சின்னத் திரை தொடர்கள் ஆக்கிரமித்துள்ளன. பல்வேறு தொலைக்காட்சிகளில் தற்போது வகைவகையான தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
படிக்க | புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி!
குடும்பத் தலைவிகளை மட்டும் குறிவைக்காமல், தற்போது அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்றவாறு தற்போது சின்னத் திரை தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இளம் தலைமுறையினரும் சின்னத் திரை தொடர்களின் வரும் பாத்திரங்களைக் கொண்டு மீம்ஸ்களாக தங்கள் கருத்துகளை கேலியாகத் தெரிவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு இளம் தலைமுறையினரையும் தற்கால தொடர்கள் கவர்ந்துள்ளன.
அதிக அளவில் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்களை டிஆர்பி பட்டியலில் வரிசைப்படுத்தப்படும். இந்தப் பட்டியல் வாரமொருமுறை வெளியிடப்படும்.
இம்முறை வெளியான டிஆர்பி பட்டியலில் பாக்கியலட்சுமி தொடர் 2 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படிக்க | தொகுப்பாளராக களமிறங்கும் 'குக் வித் கோமாளி' பாலா, நிஷா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் கடந்த வாரம் 8வது இடத்தில் இருந்தது. தற்போது 7.44 டிஆர்பி புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 6.28 புள்ளிகளுடன் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
டிஆர்பி பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சன் தொலைக்காட்சியின் கயல் (10.58), வானத்தைப் போல (10.42), சுந்தரி (9.26) ஆகிய தொடர்கள் இடம்பெற்றுள்ளன.
படிக்க | 'சுந்தரி' சீரியலை தடை செய்யனுமா?