செய்திகள்

’கேஜிஎஃப் 2’ வசூலை முறியடித்த ‘பதான்’

9th Feb 2023 04:16 PM

ADVERTISEMENT

 

ஷாருக்கானின் பதான் திரைப்படம் கேஜிஎஃப் - 2 படத்தின் வசூலை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. 

பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: 'என் அப்பா, அம்மா செய்த புண்ணியம்..’: இளையராஜா குறித்து நடிகர் சூரி

உலகம் முழுவதும் இதுவரை பதான் திரைப்படம் ரூ.800 கோடிக்கும் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் ஹிந்தியில் இப்படம் ரூ.436 கோடியை வசூலித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, கேஜிஎஃப் 2 திரைப்படம் ஹிந்தியில் ரூ.432 கோடியை வசூலித்திருந்தது. தற்போது, கேஜிஎஃப் 2 சாதனையை முறியடித்துள்ளது பதான்!

ADVERTISEMENT
ADVERTISEMENT