செய்திகள்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘ஜிகர்தண்டா 2’

9th Feb 2023 12:43 PM

ADVERTISEMENT

 

ஜிகர்தண்டா-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் தற்போது அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க- கதாநாயகனாகும் எம்.எஸ்.பாஸ்கர்

அதனைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா - 2 (டபுள் எக்ஸ்)  படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

டீசரில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் மிரட்டலான தோற்றத்தில் வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT