செய்திகள்

'என் அப்பா, அம்மா செய்த புண்ணியம்..’: இளையராஜா குறித்து நடிகர் சூரி

9th Feb 2023 03:24 PM

ADVERTISEMENT

 

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி.

‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். 

இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.   

ADVERTISEMENT

இதையும் படிக்க: நடிகர் கருணாஸ் மகள் திருமணம்

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.விடுதலை திரைப்படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கின. இதில் தனது காட்சிகளுக்கு டப்பிங் கொடுக்கும் பணிகளில் நடிகர் விஜய் சேதுபதி ஈடுபட்டார். 

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், நேற்று தனுஷ் பாடிய இப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ பாடல் வெளியானது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூரி, ‘என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்’ எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT