செய்திகள்

ஏகே 62-க்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்?

9th Feb 2023 04:48 PM

ADVERTISEMENT

 

ஏகே 62 படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் ஜன.11ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து, லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் ஸ்கிரிப்ட் பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

ADVERTISEMENT

ஆனால், விக்னேஷ் சிவன் தன் டிவிட்டர் பக்கத்தில் ஏகே 62 பற்றிய தகவலை நீக்கியதும் அவர் படத்திலிருந்து விலகியது உறுதியானது.

இதையும் படிக்க: ’கேஜிஎஃப் 2’ வசூலை முறியடித்த ‘பதான்’

அவருக்கு பதிலாக ‘கலகத்தலைவன்’ படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் அஜித் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

மேலும், இப்போட்டியில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்திருப்பதாக  தகவல் வெளியானது.

இந்நிலையில், ஏகே 62 படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT