செய்திகள்

’காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு குப்பை’: பிரகாஷ் ராஜ்

DIN

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

காஷ்மீரில் 1990களில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’

விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான  இப்படம்  இந்து மத ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரிய அரசியல் கட்சியினர் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘

அதேநேரம், உண்மையான தகவல்களுக்கு மாறாக இது உருவாக்கப்பட்டுள்ளது என எதிர்ப்புகளும் கிளம்பின. மேலும், இப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கேரள இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், ‘காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஒரு குப்பை. அதற்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது. இது பிரச்சார பாணியிலான திரைப்படம். அவர்களுக்கு(இந்து மத அடிப்படைவாதிகள்) குரைக்க மட்டுமே தெரியும். கடிக்கத் தெரியாது. பதான் திரைப்படத்தை புறக்கணிக்க முயற்சி செய்தனர். ஆனால், அப்படம் ரூ.800 கோடி வசூலித்துள்ளது. இந்த முட்டாள்களால் மோடியின் படத்தை ரூ.30 கோடிக்குக் கூட ஓடவைக்க முடியவில்லை’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT