செய்திகள்

'மனிதப்பிறவி பெண் அன்பினில் அடங்கிடும்..’ டாடா படத்தின் பாடல் வெளியீடு

8th Feb 2023 06:14 PM

ADVERTISEMENT

 

பிக் பாஸ் கவினின் டாடா திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு ’டாடா’ படத்தை இயக்கியுள்ளார். கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜென் மார்ட்டினின் இசையமைத்துள்ள இப்படத்தின்  ‘டாடா பாடல்’, ‘நம்ம தமிழ் ஃபோக்’, ’கிருட்டு கிருட்டு’ ஆகிய பாடல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இதையும் படிக்க: பீட்சா 3 - மனதைக் கவரும் முதல் பாடல் வெளியீடு

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா பாடிய 'இந்த மனிதப்பிறவி பெண் அன்பினில் அடங்கிடும்' பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிடுவதன் மூலம் ‘டாடா’ படத்திற்கு வர்த்தக ரீதியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags : Dada Kavin
ADVERTISEMENT
ADVERTISEMENT