செய்திகள்

சமந்தாவின் சாகுந்தலம்: ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்!

7th Feb 2023 01:05 PM

ADVERTISEMENT

நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சாகுந்தலம். இப்படத்தின் டிரைலர் ஜனவரி 9 ஆம் தேதி வெளியானது.

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தின் கதை மற்றும் இயக்கத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் ஏற்றுள்ளார்.

மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர். 

ADVERTISEMENT

மிகவும் புகழ்பெற்ற சாகுந்தலை புராணக் கதையில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் சாகுந்தலா - துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாப்பாத்திரத்தை அல்லு அர்ஜூன் மகள் அல்லு அர்ஹா ஏற்றுள்ளார்.

இந்தப் படம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இப்படத்தினை 3டியில் வெளியிட உள்ளதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: காந்தாரா அடுத்த பாகம் எப்படி இருக்கும்? ரிஷப் ஷெட்டி தகவல்!

தற்போது, மீண்டும் சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT