செய்திகள்

டிஆர்பி பட்டியலில் முந்தும் 2 மதிய நேர சீரியல்கள்!

DIN

சின்னத் திரை தொடர்களில் மாலை நேர தொடர்களே டிஆர்பி பட்டியலில் அதிக எண்ணிக்கையில் முன்னணி இடங்களைப் பிடிக்கின்றன. முதல் 20 இடங்களில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர்களில் 2 மட்டுமே இடம்பிடித்துள்ளன. 

பொழுதுபோக்கு அம்சங்களில் சின்னத் திரை தொடர்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அனைத்து வீடுகளிலும் ஏதேனும் ஒரு தொலைக்காட்சியின் தொடர் விரும்பி பார்க்கப்பட்டு வருவது வழக்கமாகவே உள்ளது. 

சமூக வலைதளங்கள் மூலமாக சின்னத் திரை தொடர்களில் நடிப்பவர்களுக்கும் ரசிகர் கூட்டம் குவிந்து வருகின்றன. மேலும், சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு செல்பவர்களாலும் சின்னத் திரை தொடர்கள் கவனம் பெறுகின்றன. 

அந்தவகையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல முன்னணி தொடர்களுக்கு அனைவருமே ஏதாவதொரு வகையில் ரசிகராக மாறியிருப்போம். 

மாமியார், மருமகள் பிரச்னையை அடிப்படையாக மட்டுமே வைத்து சின்னத் திரை தொடர்களை எடுக்காமல், கால மாற்றத்துக்கு ஏற்ப பெண்களின் மேம்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் தொடர்கள் எழுதப்பட்டு வருகின்றன. 

எதிர்நீச்சல், கயல், இனியா, வித்யா நம்பர் ஒன், அமுதாவும் அன்னலட்சுமியும் போன்ற தொடர்களில் பெண்களின் முன்னேற்றம், கல்வியின் அவசியம், பெண்களின் பொருளாதார சுதந்திரம் போன்றவை பேசப்படுகின்றன. இதனால், இதுபோன்ற தொடர்களுக்கு இளம் தலைமுறையினரும் ரசிகர்களாக உள்ளனர். 

எனினும் மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள், குடும்பத் தலைவிகளை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுகின்றன. நண்பகலில் ஒளிபரப்பாகும் நேரமும் அதற்கு முக்கிய காரணம். 

படிக்க'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகிய நடிகை! ஜீ தமிழின் சீதா ராமனில்..
 
இந்நிலையில், சின்னத் திரை தொடர்களுக்கு மாதந்தோறும்  டிஆர்பி பட்டியல் வெளியாகும். அந்தவகையில் ஜனவரி மாதத்துக்கான டிஆர்பி படடியல் வெளியாகியுள்ளது. அதில் 20 தொடர்கள் முன்னணி தொடர்களாக இடம்பெற்றுள்ளன. அதில் 2 மட்டுமே மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர். எஞ்சியவை அனைத்தும் மாலை நேரங்களிலில் (பிரைம் டைம்) ஒளிபரப்பாகின்றன.

மதிய நேரத்தில் ஒளிபரப்பானாலும், பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது விஜய் தொலைக்காட்சியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் சன் தொலைக்காட்சியின் 'இலக்கியா' ஆகிய தொடர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT