செய்திகள்

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்!

DIN

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் (68) உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை டி.பி.கஜேந்திரன்  காலமானார். இவர் விசு, மோகன் காந்திராமன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இவர், எங்க ஊரு காவல்காரன், பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரைப் பதித்தவர் டி.பி.கஜேந்திரன்.

தற்போது அவரது இல்லத்தில் உடலை வைத்து அவரது உறவினர்கள் மேற்கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து,  நடிகர் செந்தில், கவுண்டமணி, ரமேஷ் கண்ணா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT