செய்திகள்

‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராஃப்

5th Feb 2023 06:53 PM

ADVERTISEMENT

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார். 

‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

இதையும் படிக்க- நடிகை த்ரிஷாவின் 67வது படம் குறித்த அப்டேட்! 

படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

முன்னதாக இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் அமிதாப்பச்சனை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராஃப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT